தமாகாவில் 6 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்துள்ளார்.
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், தமாகாவில், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்துக்கு என்.எஸ்.நாராயணசாமி, பெரம்பலூர் மாவட்டத்துக்கு கிருஷ்ண ஜனார்தனன், வடசென்னை தெற்கு மாவட்டத்துக்கு ராயபுரம் பாலா, தென்சென்னை வடக்கு மாவட்டத்துக்கு சைதை மனோகரன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், மத்திய சென்னை மேற்கு மாவட்டத்துக்கு அண்ணாநகர் ராம்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுள்ளனர்.
மேலும், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த எஸ்.சவுந்தர் முருகன், மாநில துணைத் தலைவராகவும், மீனவர் அணி மாநிலத் தலைவராக பி.ஜி.நலமகாராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.