திருவண்ணாமலை கார்த்திகை தீபம்; சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் காயம்!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (10:17 IST)
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு மலை ஏறுவதற்கான பாஸ்களை வாங்க பக்தர்கள் முண்டியடித்து சென்றதால் சுற்றுசுவர் இடிந்து விழுந்துள்ளது.



திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இவ்விழாவை காண பல மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை புரிகின்றனர்.

இன்று கார்த்திகை தீப நாளில் காலை 3.30 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதையடுத்து மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப மண்டம் எழுந்தருளுதலும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான டோக்கன்கள் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதை வாங்குவதற்காக பக்தர்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் பரபரப்பு எழுந்தது. பலர் சுற்றுசுவர் ஏறி குதிக்க முயல சுவர் இடிந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்து முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்