திருவள்ளூர் மாவட்டத்தில் ஆன்மீக மடம் நடத்தி வருபவர் சாமியார் முனுசாமி. இவரது ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு அந்த பகுதி கல்லூரி மாணவி ஹேமமாலினி என்பவர் சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அவர் வீடு திரும்பாத நிலையில் ஆசிரமத்திற்கு அருகே அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில் சாமியார் முனுசாமி தலைமறைவானது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தலைமறைவான முனுசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கொலை விவகாரத்தில் எந்த பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்தி தண்டனை அளிக்கப்பட்டு மாணவி ஹேமமாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.