பாஜகவுக்கு ஓட்டு கேட்டு போன அதிமுக அமைச்சர்! – கூட்டணி தொடர்கிறதா?

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (10:03 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கீரமங்கலத்தில் பாஜகவினருக்கு ஓட்டு கேட்டு அதிமுக அமைச்சர் சென்றது வைரலாகியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பாஜக கூட்டணியை முறித்து தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

அதன்படி அனைத்து பகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலையும் தமிழக பாஜக தலைமை வெளியிட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிமுக – பாஜக தனித்து போட்டியிட்டாலும் கீரமங்கலம் பேரூராட்சியில் மட்டும் அதிமுக – திமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. மொத்தம் உள்ள 15 வார்டில் 9ல் அதிமுகவும், 2ல் பாஜகவும் போட்டியிடுகின்றன. இதேபோல தென்காசியில் அமமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்