அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி மூடப்படுகிறதா? – கல்வித்துறை விளக்கம்!

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:57 IST)
அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக வெளியான தகவல் குறித்து கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்த்து ஆண்டுதோறும் அரசு அங்கன்வாடி மையங்கள் மூலமாக 52,933 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசால் தொடங்கப்பட்ட 2,381 அங்கன்வாடி மையங்களிலும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட உள்ளதாக தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் “அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்களை அந்தந்த பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்