திருத்தணியில் பரவும் மர்ம நோய்; நூற்றுக்கணக்கில் கோழிகள் பலி!

செவ்வாய், 13 அக்டோபர் 2020 (14:41 IST)
திருத்தணி பகுதியில் கோழிகளிடையே திடீரென தோன்றியுள்ள மர்ம நோய் காரணமாக நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பலர் விவசாய தொழில் புரிந்து வருவதோடு, கால்நடைகளை வளர்த்து விற்பனையும் செய்து வருகின்றனர். இதற்காக வீடுகளிலேயே பண்ணைகள் அமைத்து ஆடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கால்நடைகள் இடையே புதிய விதமான நோய் பரவி உள்ளது. இதனால் பலரின் பண்ணைகளில் கோழிகள் இறந்துள்ளன, இதுகுறித்து அறிந்த கால்நடை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற இறந்த கோழிகளை ஆய்விற்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகே கோழிகள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்