திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா? பரபரப்பு பேட்டி..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (10:57 IST)
தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரி விரைவில் மாற்றப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் திருநாவுக்கரசர் புதிய தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இன்று திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தபோது மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன் என்ற கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.  
 
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இந்த நிலையில் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற மிகவும் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதிக தொகுதிகளை பேச்சு வார்த்தையின் அடிப்படையில் பெற்று போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்