தமிழக அரசு 34 ஏசி படுக்கை வசதி பேருந்துகள், 10 அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள் (கழிவறை வசதி கொண்டது), ஏசி இல்லாத 2 படுக்கை வசதி பேருந்துகள், 6 ஏசி படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் என 52 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில், அரசு ஏசி பேருந்துகளில் 10% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.40 முதல் ரூ.150 வரை கட்டணம் குறைந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களை தவிர, மற்ற நாட்களில் பேருந்து கட்டணத்தில் 10% குறைக்கப்படடும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள், ஏசி இல்லாத படுக்கை வசதி இல்லாத பேருந்துகளில் கிமீ 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.