இதே வேலையா போச்சு... முந்திச் செல்ல முயன்றதால் வந்த விபரீதம்...

வெள்ளி, 19 அக்டோபர் 2018 (18:08 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதியதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச்சென்று கொண்டிருந்த பிஎல் ஏ என்ற பேருந்து தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த  மீரா என்ற பேருந்தும் உளூர் என்ற இடத்தில் நேருக்கு நேர்  மோதியதியதில் இருபேருந்துகளில் இருந்த ஓட்டுநர் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸில்  ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
 
இது குறித்து போலீஸார் விசாரிக்கையில் பிஎல் ஏ பேருந்து முன்னால் சென்ற அரசுப்பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது எதிரேவந்த பேருந்து மோதியதுதான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
 
இதனையடுத்து ஓட்டுநர் மீது வழக்கு வழக்கு பதிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்