இந்த கோர விபத்தில் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது. இதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு சிறப்பான மருத்துவ உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.