பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் கூட்டணி அமைப்பது, மாநாடு நடத்துவது என அரசியல் கட்சிகள் பரபரப்பாக களப்பணியாற்றி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போதே விஜய் கூட்டணிக்கு வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் தவெகவை கூட்டணியில் இணைக்க பெரிய கட்சிகள் பலவும் முயற்சித்து வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. பாஜகவும் அதற்கான முயற்சிகளில் இருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது “NDA கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவது குறித்து அடுத்த ஒரு வருடத்தில் முடிவு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார். இதன்மூலம் தவெகவை கூட்டணியில் கொண்டு வருவது குறித்து பாஜகவிலும் பேச்சுவார்த்தை இருப்பது உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K