மதம் மாறிய தலித் கிறிஸ்துவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்: பாராளுமன்றத்தில் திருமாவளவன்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (18:58 IST)
மதம் மாறிய கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என்றும் நாட்டில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் பாராளுமன்றத்தில் முழங்கினார் 
 
மதம் மாறியவர்களுக்கு இந்துக்களுக்கு உள்ள சலுகைகள் கிடையாது என்றும் அவர்கள் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்தே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்