சனாதான சக்திகள் அகற்றப்படும்.. 62 பக்க விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (10:52 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் இரண்டு தொகுதிகளிலுமே பானை சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சற்று முன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
 
மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். அதில் ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு, தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அம்பேத்கர் பிறந்த நாளை அறிவு திருநாள் என்று அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும் என்றும் பழங்குடியின மக்களுக்கு தனி வங்கி அமைக்க அமைக்கப்படும் என்றும் உயர் ஜாதி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றத்திலும் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இலங்கை உடனான வெளியுறவு கொள்கையில் தமிழக நலன் பாதுகாக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் 62 பக்க தேர்தல் அறிக்கையை வி.சி.க. வெளியிட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்