கனடா பிரதமருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்த திருமாவளவன்!

புதன், 2 டிசம்பர் 2020 (16:31 IST)
டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் இந்த போராட்டம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் இதனை அடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு தனது ஆதரவு ஒன்று என கனடா பிரதமர் ட்ரூடோ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்திய வெளியுறவுத் துறை கனடா பிரதமருக்கு கண்டனம் தெரிவித்தது என்பதும் ஜனநாயக நாட்டில் நடைபெறும் ஒரு போராட்டத்திற்கு இன்னொரு நாடு தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த கனடா பிரதமருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ள திருமாவளவன், தேசம் மொழி மற்றும் இனம் ஒருபோதும் ஜனநாயக சக்திகளுக்கு தடை அல்ல என்றும் ட்ரூடோவின் ஜனநாயக அணுகுமுறைகள் மற்றும் தைரியத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்