திக் ! திக் ! திகில்... தி.மு.க கட்சிக்குள் களையெடுக்க தொடங்கிய செந்தில் பாலாஜி..

சனி, 13 ஜூலை 2019 (16:57 IST)
தமிழக அளவில் கரூர் என்றாலே பஸ்பாடி தொழில், கொசுவலை, டெக்ஸ்டைல் ஏற்றுமதி என்று பல புகழ்கள் இருந்த நிலையிலும், அரசியல் வரலாற்றில் ம.தி.மு.க கட்சி அதே கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சியில் தான் உருவானது. மேலும், அரசியல் மாற்றங்கள் அ.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கும், தி.மு.க விலிருந்து அ.தி.மு.க விற்கும் மாறும் காட்சிகளும் அடிக்கடி நடைபெற்று வருவதும் இந்த கரூர் மாவட்டத்தில் தான்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகார துஷ்பிரயோகம் செய்ததையடுத்தும், அவரை ஈடுகட்ட முடியாமலும் தான் அ.தி.மு.க விலிருந்து, செந்தில் பாலாஜிக்கு பயந்து கொண்டு 10 ஆயிரம் அ.தி.மு.க தொண்டர்களுடன் தி.மு.க வில் இணைந்தார். அப்படி செந்தில் பாலாஜிக்காக அ.தி.மு.க கட்சியிலிருந்து தி.மு.க விற்கு மாறிய சின்னசாமி, தற்போது செந்தில் பாலாஜி தி.மு.க விற்கு வந்ததன் பிறகு, சின்னசாமி யின் பலம் குறைந்து கொண்டே தற்போது நொந்து நூடுல்ஸ் ஆன கதை கரூரில் தினம் தினம் நடக்கின்றது. 
 
சின்னசாமியோ சுமார் 200 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 10 ஆயிரம் நபர்களுடன் அ.தி.மு.க விலிருந்து கருணாநிதி முன்னிலையில் இணைந்தார்., ஆனால் அவருக்கு கூட மாவட்ட செயலாளர் பதவி கிடைக்க வில்லை,. ஆனால்., சுமார் 5 பேருந்துகளில் 100 பேர் மட்டுமே சென்று தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இணைந்த உடனேயே கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வேட்பாளர் பதவி கொடுத்து தற்போது எம்.எல்.ஏ வாகவும் இருக்கின்றார் செந்தில் பாலாஜி.
ஆனால்  இத்தனை நாட்களாக கட்சியே மூச்சு, கட்சியே உயிர் என்று இருந்த உண்மையான தி.மு.க வினரிடையே கரூர் மாவட்ட அளவில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், நாளுக்கு நாள் தி.மு.க வின் உண்மை விசுவாசிகளை களையெடுக்கும் பணியினை ஆரம்பித்து விட்டு, செந்தில் பாலாஜியுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பதவி கொடுக்க முயலும் செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது. 
 
ஆகவே, முன்னாள் அமைச்சர் சின்னசாமியின் தற்போதைய நிலைமை என்ன ? மற்றும் கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் நிலைமை என்ன ? உண்மையான தி.மு.க வினருக்கு என்ன நிலைமை ? என்று கரூர் மாவட்ட தி.மு.க வினர் ஒவ்வொரு நாளும் உணரும் பட்சத்தில் தற்போது, செந்தில் பாலாஜியின்  ஒரே நோக்கம் கரூர் மாவட்ட அளவில் அமமுக வின் தினகரன் கட்சியை காலி செய்வதே தான் என்பது ஸ்டாலின் அறிந்த செய்தியாம். 
 
இது ஒரு புறம் இருக்க, ஆங்காங்கே பிளக்ஸ்களில் மாவட்ட நிர்வாகிகள் படமும் இல்லை, கூட்டணி கட்சி நிர்வாகிகளின் படமும் இல்லை என்பது கூட்டணி கட்சியினர் விடும் மூச்சின் மூலம் வரும் கூடுதல் தகவலாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்