நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

Prasanth Karthick

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (18:30 IST)

நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளரான துரைமுருகனின் சாட்டை சேனலுக்கும் , நாதகவுக்கும் தொடர்பில்லை என சீமான் விடுத்துள்ள திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வரும் நிலையில், துரைமுருகன் அதன் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருகிறார். துரைமுருகன் சாட்டை என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் நிலையில் அதில் பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துகளும், விவாதங்களும் வீடியோவாக வெளியாகி வருகிறது.

 

இந்நிலையில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் “திருச்சி துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ யூட்யூப் சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதற்கு எந்த வகையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

 

சாட்டை சேனலை துரைமுருகன் பல ஆண்டுகளாக நடத்தி வரும் நிலையில் அதில் திமுக. பாஜக என பல கட்சிகளையும் விமர்சித்து வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இத்தனை நாள் கழித்து திடீரென இந்த அறிக்கை வெளியாவது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. சீமான் சமீபத்தில் பாஜக பிரமுகர்களுடன் சந்திப்பு நடத்தியதற்கும், இந்த அறிக்கைக்கும் தொடர்பிருக்குமா என்றும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்