ஓவர் சீன்: மாற்றுவழி இல்லாமல் மாட்டிக்கொண்ட தேமுதிக!!!

செவ்வாய், 5 மார்ச் 2019 (15:04 IST)
திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டதாக ஸ்டாலின் அறிவித்துவிட்டதால் தேமுதிக வழி இல்லாமல் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளது.

 
பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத தேமுதிக, ஆரம்பம் முதலே கொஞ்சம் ஓவராய் தான் போய்க்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிமுக பாமகவிற்கு 7 சீட் கொடுத்த பின்னர், தங்களுக்கு 7 அல்லது அதற்கு மேலான சீட்டுகளை கொடுத்தால் தான் கூட்டணி என அதிமுகவிடம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது தேமுதிக.
 
இதையடுத்து இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கும் தேமுதிக பிடிகொடுக்கவில்லை.

 
 
இந்நிலையில் திமுகவில் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும், 20 தொகுதிகள் திமுகவிற்கும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இனி எங்கள் கூட்டணியில் எந்த கட்சிக்கும் சீட் கொடுக்கப்படமாட்டாது எனவும் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆகவே இனி தேமுதிகவே நினைத்தாலும் திமுகவில் இணைய முடியாது.
 
தேமுதிக அதிமுகவில் இணைய வேண்டும் அல்லது தனித்து போட்டியிட வேண்டும், தனித்து போட்டியிடும் அளவுக்கு தேமுதிகபலம் வாய்ந்த அணியாக இப்பொழுது இல்லை. எனவே ஒரே வழி அதிமுக உடன் கூட்டணி தான்.
 
இதுவரை எங்களுக்கு இத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும், இல்லையேல் அவ்வளவு தான் என தேமுதிக அதிமுகவை நிர்பந்தித்து வந்தது. ஆனால் தற்பொழுது வேறு வழி இல்லை. ரொம்ப அடம்பிடித்தால் அதிமுகவும் தேமுதிகவை கழற்றிவிட்டுவிடும்.
 
வேறு வழி இல்லாமல் அமைதியாக அதிமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்குகிறதோ அதை வாங்கிக்கொண்டு போவது தான் இவர்களின் கடைசி சான்ஸ் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்