வளர்ச்சிக்கான எந்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை -எடப்பாடி பழனிசாமி

Sinoj
திங்கள், 19 பிப்ரவரி 2024 (16:42 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
 
இந்த பட்ஜெட்டில் இளைஞர் நலன், மக்களுக்கான வீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
 
2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டபேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  இன்று தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில், திமுக அரசின் பட்ஜெட் பற்றி அதிமுக மற்றும் அமமுக விமர்சித்துள்ளது.
 
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளது, வளர்ச்சிக்கான எந்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். 
அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், மாபெரும் தமிழ்க்கனவு எனும் பெயரில் தாக்கலாகியிருக்கும் நிதி நிலை அறிக்கை திமுக அரசின் பகல் கனவு என்று விமர்சித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்