கனமழையில் கணவனை தேடிய பெண்! கண்டுபிடித்து கொடுத்த போலீஸ்
சனி, 10 டிசம்பர் 2022 (18:54 IST)
சென்னை அடுத்த உத்தண்டியில் கணவனைக் காணவில்லை என்று மழையில் கணவனைத் தேடிய மனைவிக்கு கணவனை கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.
கடந்த 5 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது., இதன் காரணமாக அதிகாலையில், புயலாக வலுப்பெற்றது. இது கிழக்கு கடற்கரை சாலையோரமாக நள்ளிரவு 2:30 மணிக்கு கரையைக் கடந்தது. இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது.
தன் கணவரைக் காணவில்லை என்று ஒரு பெண் போலீஸீல் புகாரளித்தார்.
உடனே அவரது கணவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தது உடன், அவர்கள் இருவரையும் முகாமில் சேர்த்தனர்.