தடையை மீறி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்: எச்சரித்து அனுப்பிய சென்னை போலீஸ்!

சனி, 10 டிசம்பர் 2022 (17:02 IST)
தடையை மீறி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்: எச்சரித்து அனுப்பிய சென்னை போலீஸ்!
சென்னை மற்றும் மகாபலிபுரம் அருகே நேற்று மாண்டஸ் புயல் கரையை  கடந்த நிலையில் கடற்கரையிலுள்ள அலைகள் இன்னும் கொந்தளிப்பாக இருக்கிறது என்றும் அதனால் மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள கடற்கரைக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தடையை மீறி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் காதலர்கள் உள்பட பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து தடையை மீறி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை புகைப்படம் எடுத்து அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்
 
இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்