கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி,காவல் துறையிடம் மனைவி புகார்!

J.Durai

வெள்ளி, 21 ஜூன் 2024 (11:28 IST)
மதுரை அருகே,சோழவந்தான், முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகஜோதி. இவர், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்து கணவருடன் மதுரை அருகே உள்ள வரிச்சூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.
 
இவருக்கு , மூன்று குழந்தைகள் உள்ளது . இந்த நிலையில், இவரை இவரது கணவர் தொடர்ந்து அடித்து துன்புறுத்துவதாகவும், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று விற்று செலவு செய்வதாகவும், அடிக்கடி தன்னை அடித்து துன் புறுத்துவதால், சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்து 10 நாட்கள் 20 நாட்கள் தங்கி விட்டுச் பிறகு வீட்டிற்கு செல்வதாகவும் இருந்துள்ளார்.
 
இந்த நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் தனது கணவர் அடித்து துன்புறுத்தியதால், வேறு வழி இன்றி நேற்று முள்ளிப் பள்ளத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில்,முள்ளிப் பள்ளத்திற்கு வந்த, தனது கணவர் முள்ளி பள்ளத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டில் வைத்திருந்த தாலி மோதிரம் செயின் உள்ளிட்ட பொருட்களை எடுத்து  சென்று விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அவருடன் வாழ விருப்பம் இல்லை என்றும் இது குறித்து ஏற்கனவே, காவல் துறையின் 100-க்கு போன் பண்ணி தெரிவித் ததாகவும், மதுரை  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளதாகவும்,   தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காடுபட்டி காவல் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்