ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

vinoth

ஞாயிறு, 16 ஜூன் 2024 (09:07 IST)
தற்போதைய காலகட்டத்தில் உலகம் நம் கைக்குள் வந்துவிட்டது. எதைவேண்டுமானாலும் நம் கையில் இருக்கும் செல்போனின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் இருந்து இதயத்துடிப்பு சீராக உள்ளதாக என்பது வரை ஆப்பிள் உள்ளிட்ட உயர்ரக போன்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் மேப் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தங்கள் மேப் வசதியை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இதற்காக உலகெங்கும் வாகனங்கள் கேமராக்களைப் பொருத்தி அவற்றை நகர் முழுவதும் செல்ல வைத்து 360 டிகிரியில் காட்சிகளை படமாக்கி வருகிறது. அப்படி ஆப்பிள் மேப் அப்கிரேட் வண்டி மதுரையின் நகர்ப்பகுதிகளில் உலாவருகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்