தமிழ்நாட்டில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது! - அமைச்சர் நாசர் உறுதி!

Prasanth K

சனி, 27 செப்டம்பர் 2025 (12:35 IST)

சமீபத்தில் மத்திய அரசு புதிய வக்பு வாரிய சட்டத்தை அமல்படுத்திய நிலையில், அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “இச்சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடுத்தது. இதே போல் பல்வேறு தரப்பினரும் இச்சட்டத்தினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வாறு தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 15.09.2025 அன்று இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது, மேற்கண்ட வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மத்திய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்பு திருத்தச் சட்டத்தின் படி, வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது." என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்