அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உலக நாடுகளுக்கு பலவற்றிற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தியது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ள மறுப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதலாக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டொனால்டு ட்ரம்ப், உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்ததுடன், அமெரிக்க அரசின் பொருளாதார சுமைகளை குறைக்க, வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளையும் நிறுத்துவதாக அறிவித்தார்.
முன்னதாக ஏழை நாடுகளுக்கான வறுமை ஒழிப்பு நிதி, கல்வி, மருத்துவ உதவிகளுக்கான நிதி, உலக சுகாதார நிறுவனத்திற்கான மருத்துவ உதவி நிதி, நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டன. மொத்தமாக ஆண்டுக்கு 5 பில்லியன் அளவிலான நிதியுதவிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ட்ரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிதியுதவியை நிறுத்தியுள்ளதாகவும், ட்ரம்பின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் ட்ரம்ப் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விசாரணை மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு, நாட்டின் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு பிற நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியை குறைக்கவோ, உயர்த்தவோ அல்லது நிறுத்தி வைக்கவோ அதிபருக்கு அதிகாரம் உள்ளதால், இதில் தலையிட முடியாது என தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ட்ரம்ப்க்கு ஆதரவாக வந்துள்ள இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K