சீமான் சனியின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார்! - ஜெயக்குமார் கடும் தாக்கு!

Prasanth K

சனி, 27 செப்டம்பர் 2025 (12:13 IST)

அண்ணா, எம்ஜிஆர் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சி.பா.ஆதித்தனார் 121வது பிறந்தநாளில் எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சட்டப்பேரவை தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் சி.பா.ஆதித்தனார். அவர் அமர்ந்த நாற்காலியில் புரட்சித்தலைவி அம்மா என்னை சபாநாயகராக அமர வைத்ததை பெரும் பெருமையாகவே கருதுகிறேன்

 

மறைந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறித்து யார் விமர்சனம் செய்தாலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாது. சிலருக்கு நாக்கில் சனி இருக்கும், சிலருக்கு ஜென்ம சனி இருக்கும். ஆனால் சீமான் சனியின் ஒட்டுமொத்த உருவமாகவே இருக்கிறார். 

 

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை அவர் நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் அவரை கன்னாபின்னாவென்று பேசிவிட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும். சீமான் தனது பேச்சை மட்டுமல்ல, அவரையும் மாற்றிக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்