ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தில், உதடுகள் ஒட்டப்பட்டு, வாயில் கல் அடைக்கப்பட்ட நிலையில், 19 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை காட்டில் கைவிடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு புறம்பான உறவில் பிறந்த குழந்தையை. சமூக அவமானத்திற்கு அஞ்சி, குழந்தையை பெற்ற தாயும், அவரது தந்தையும் போலியான அடையாளங்களுடன் ஒரு வாடகை வீட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். குழந்தையை விற்கவும் அவர்கள் முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், சில வாரங்களுக்கு பிறகு குழந்தையை காட்டில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய பில்வாரா காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர சிங் யாதவ், "தகவலின் அடிப்படையில் ஒரு பெண்ணை நாங்கள் கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில், அவர் ஒரு நபருடன் வைத்திருந்த உறவில் இந்த குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது," என்று கூறினார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல்நிலை சீராகி வருவதாக கூறப்பட்டாலும், அதன் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.