ஆவின் நெய் விலை குறைப்பு.. ஆனால் பால் விலை அதிகரிப்பு? - ஜிஎஸ்டி குறைத்தும் பயன் இல்லையா?

Prasanth K

திங்கள், 22 செப்டம்பர் 2025 (14:22 IST)

இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில் ஆவின் பால் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்து பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் அல்லது முழுவதுமாக வரி விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினில் பால் விலை குறையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

 

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆவின், ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.690 ல் இருந்து ரூ.650 ஆகவும், 500 கிராம் பனீர் ரூ300 ல் இருந்து ரூ.275 ஆகவும், கால் கிலோ பனீர் ரூ.120 ல் இருந்து ரூ.110 ஆகவும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. நெய், பனீர் தவிர்த்து பால் விலை குறைப்பு பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இதுகுறித்து கடும் கண்டனங்களை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. பிரதமர் நாட்டு மக்களின் நலனுக்காக அத்தியாவசிய பொருட்களின் விலையில் வரியை குறைத்தால், அதை பயன்படுத்தி திமுக அரசு விலையை ஏற்றிக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். 

 

இந்நிலையில் ஆவின் பால் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்