முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை அமல்படுத்தும் தெலுங்கான அரசு!

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (20:09 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் காலை உணவுத்திட்டத்தை  முன்னுதாரணமாகக் கொண்டு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  அம்மாநிலத்திலும் இத்திட்டத்தை தொடங்கவுள்ளார்.

அதன்படி, வரும் அக்டோபர் 24 ஆம் தேதி செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து இத்திட்டத்தை ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்