அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் தந்தையை சந்தித்த நடிகர் விஜய்!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (06:58 IST)
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஆண்டு தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார்.

இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. அதிலும் குறிப்பாக விஜய் தன்னுடைய தந்தையிடம் பேசியே பல ஆண்டுகள் ஆவதாக சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது போல எஸ் ஏ சந்திரசேகரனின் சில நேர்காணல்களும் அமைந்தன.

இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் இருந்து திரும்பியுள்ள விஜய், அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் தன்னுடைய தந்தையை சந்தித்து நலம்  விசாரித்துள்ளார். மேலும் தந்தை மற்றும் தாய் ஷோபாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்