தமிழகத்தில் டெங்கு; முகக்கவசம் அணிவது கட்டாயம்! – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (10:15 IST)
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில். மருத்துவ துறையினர் சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்