மழை சீசன் இன்னும் முடியல.. பொங்கல் வரை இருக்கு! வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick

செவ்வாய், 31 டிசம்பர் 2024 (16:02 IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் இன்னும் பருவக்காலம் நிறைவு பெறவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்துள்ள நிலையில் ஆங்காங்கே வெயிலும் வீசி வருகிறது. இதனால் பருவமழை காலம் முடிந்து விட்டதாக பலரும் நினைத்த நிலையில் பருவமழைக்காலம் முடியவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் “வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த 2024ம் ஆண்டில் 143 மி.மீ அதிகம் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் நான்கு புயல்கள் ஏற்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்