தமிழத்தில் கஜாபுயல் வந்து ஒரு புரட்டு புரட்டி போட்டு விட்டுப் போன பிறகு மீண்டும் நேற்று காற்றுடம் மழை பெய்தது. இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகின்ற காரணத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் விடிகாலை வரை பலமாக மழைபெய்தது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்தது.