ஊரடங்கின் போது வெளியே வந்த மக்கள்….வாகனங்களை அடித்து நொறுக்கிய போலீஸார்!!!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (19:37 IST)
தர்மபுரியில், ஊரடங்கு உத்தரவை மிறி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களை போலிஸார் சேதப்படுத்தியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று தர்மபுரியில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சென்ற இருசக்கரவாகனங்களின் முகப்பு விளக்குகள், இண்டிகேட்டர் விளக்குகளை  போலீஸார் லத்தியால் அடித்து உடைத்தனர். வெளியே மக்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

போலீஸார் லத்தினால் இருசக்கரவாகனங்களின் விளக்குகளை அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்