ஸ்மார்ட் ரேசன் கார்டில் உள்ள 5 வகை குறியீடுகளுக்கான அர்த்தம்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (15:31 IST)
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கும் முன்பு ரேசன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும்,  தமிழக அரசின் பயன்கள் மற்றும் சலுகைகள் உரிய மக்களை சென்றடைய வேண்டியும் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் ’ஸ்மார்ட் ரேசன் கார்டு’ ஆகும்.
இந்த ரேசன் கார்டு 5 வகைகளை கொண்டுள்ளது. அதாவது குடும்பத்தின் வருவாயை பொறுத்து இந்த ரேசன் கார்டுகள் இருக்கும் என்று தெரிகிறது. 
 
இந்த ரேசன் கார்டுகள் பார்க்க ஒன்றுபோல் இருந்தாலும், இதில் சில குறியீடுகள் உள்ளன. அதனை அந்த குறியீடுகள் குறித்த அர்த்தம் இதில் அறிந்து கொள்ளலாம்.
1) PHH: ரேசன் கார்டில் PHH என்று குறிப்பிட்டிருந்தால் நியாய விலைக்கடையில் இதன் பயனாளர்கள் அரிசி, உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம்.தமிழகத்தில் இந்த ரேசன் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை: 76, 99. 940 ஆகும்.

2) PHH - AAY : இந்தக்குறியீடு ரேசன் கார்டில் இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் இந்த ரேசன் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை: 18,64,000
 
3) NPHH: இந்த குறியீட்டு ரேசன் கார்டில் உள்ளவர்கள் நியாயவிலைக்கடையில் அரிசி உட்பட அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். தமிழகத்தில் இந்த ரேசன் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை: 90. 08, 842
 
4) NPHH - s :  இந்தக் குறியீடு உள்ள ரேசன்கார்டுக்கு அரிசியை தவிர்த்து  சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வங்கலாம். தமிழகத்தில் இந்த ரேசன் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை : 10, 01,605.
 
5) NPHH - Nc : இந்தக் குறியீடு உள்ள ரேசன் கார்டுக்கு எந்த பொருளும் கிடைக்காது. இதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாக பயன்படுத்த மட்டுமே  உதவும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்