மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவர்.... பரபரப்பு சம்பவம்

புதன், 1 பிப்ரவரி 2023 (17:32 IST)
சென்னை புழல் அருகே, மனைவியின் கள்ளக் காதலனை கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்துள்ள புழல் லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுதாசந்தர்(22) இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர், ஆவடியில் வசித்த போது, அப்பகுதியில் வசித்த சுதாசந்தருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராகவி என்ற பெண்ணுடன்  காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் காதல் பெற்றோருக்கு தெரியவே, அவர்களின் உறவினர் வசந்த் என்ற இளைஞருக்கு ராகவியை திருமணம் செய்து வைத்தனர்.

இந்த தம்பதிக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில், வசந்திற்கும், ராகவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றனர்.

ராகவி, முன்னாள் காதலர் சுதசந்தருடன் சேர்ந்து வாழ முடிவு செய்து, புழலில் வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் குழந்தையுடன் வசித்து வந்தனர்.

தன் மனைவி ராகவியை அபகரித்து வாழ்ந்து வருவதால் ஆத்திரமடைந்த  வசந்த், சுதாசந்தரை கொலை செய்ய திட்டமிட்டு,  நேற்று 5 பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி  ராகவியிடம்  போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவல்கள்   தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து  கொலை செய்த குற்றவாளிகளை தனிப்படை  போலீஸார் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்