நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம்.. என்ன காரணம்?

செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:29 IST)
நடிகையின் அரசியல்வாதியுமான குஷ்பூவிடம் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ சென்னை விமான நிலையத்தில் முழங்கால் காயமடைந்து நிலையில் தன்னை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலியை கேட்டு உள்ளார். 
 
ஆனால் விமான நிறுவனம் சக்கர நாற்காலியை அவருக்கு கொண்டு வரவில்லை என தெரிகிறது. இதற்காக அரை மணி நேரம் காயத்துடன் காத்திருந்த அவர் இது குறித்த தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
காயம் அடைந்ததற்காக சக்கர நாற்காலி கேட்டதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை நீங்கள் இதைவிட இன்னும் நல்ல சேவையை செய்திருக்க முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
 
குஷ்புவின் இந்த டுவிட்டிற்கு ஏர் இந்தியா சார்பில் மன்னிப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் உங்களது கசப்பான அனுபவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் இந்த விவகாரம் உடனடியாக விமான நிலைய குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் பதிலளித்து உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்