சென்னை, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த ரேகா என்ற பெண் ஆண்டோவும், அவரது மனைவியும் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் போலீஸார் அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்கும் என்று எம்.எல்.ஏ. கருணாநிதி தெரிவித்துள்ளார்.