கருணாநிதி மறைவிற்கு பின் ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி

வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (06:42 IST)
திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும் கட்சி விஷயத்திலும் சரி, அரசியல் விஷயத்திலும் சரி, அவர் எந்த முக்கிய முடிவை எடுப்பதாக இருந்தாலும் தலைவர் கருணாநிதியிடம் ஆலோசனை பெற்றே எடுத்து வந்தார். அல்லது ஒரு முடிவை எடுத்த பின்னர் அவரிடம் தனது முடிவையும் அதன் விளைவு குறித்தும் ஆலோசிப்பது வழக்கம்.
 
ஆனால் நேற்று அண்ணா சமாதி அருகே இடம் கொடுக்க மறுத்த தமிழக அரசின் நடவடிக்கையை அவர் முதல்முதலாக கருணாநிதியின் ஆலோசனை இல்லாமல் முடிவு எடுத்தார். தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை செய்தாலும் உடனடியாக ஐகோர்ட்டில் இதுகுறித்து மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது ஸ்டாலின் தான். கருணாநிதி மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் எடுத்த முதல் முடிவுக்கு நேற்று வெற்றி கிடைத்துள்ளது. எனவே இனிமேலும் அவர் தொடர்ந்து வெற்றிகரமான முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கை திமுக தொண்டர்களுக்கு வந்துவிட்டது என்பது நேற்றை இறுதியாத்திரையில் தொண்டர்கள் பேசிக்கொண்டதில் இருந்து தெரிகிறது.
 
அதிமுக போல் தலைமையில் உள்ளவர் திடீரென மறைந்துவிட்டால் அந்த பொறுப்புக்கு யார்? என்ற கேள்வியே திமுகவில் எழவில்லை. அதற்கு காரணம் அரசியல் வாரிசு ஸ்டாலின் தான் என்பதை கருணநிதி சரியாக கைகாட்டி சென்றதுதான் என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்