குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்

புதன், 8 ஆகஸ்ட் 2018 (18:07 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். இவரது இறப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நேரில் வந்து இன்று அஞ்சலி செலுத்தினர்.
 
ராஜாஜி அரங்கில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
 
இதையடுத்து கருணாநிதியின் உடல் இறுதி ஊர்லவமாக அலகரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மெரினா வந்தடைந்தது. பின்னர் முப்படை வீரர்களால் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்