60 வருட போராட்டம்! NITல் கால்வைத்த முதல் பழங்குடி மாணவிகள்! – தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு!

Prasanth Karthick

செவ்வாய், 9 ஜூலை 2024 (10:57 IST)

60 ஆண்டுகளில் முதன்முறையாக என்.ஐ.டியில் படிக்க தேர்வான தமிழகத்தை சேர்ந்த பழங்குடியின மாணவிகளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

2024ம் ஆண்டு JEE தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அதில் தேர்வு எழுதிய தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடி மாணவிகளான ரோகிணி மற்றும் சுகன்யா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு திருச்சி NIT ல் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் என்.ஐ.டியில் கால் வைக்கும் முதல் பழங்குடி மாணவிகள் என்ற பெருமையை இதன்மூலம் அவர்கள் பெற்றுள்ளனர்.
 

ALSO READ: குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் தவறி விழுந்த நபர்.. உடனடியாக மீட்ட தீயணைப்பு துறையினர்

ஜேஇஇ தேர்வில் 73.8 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்துள்ள ரோகிணி வேதிப்பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளார். சுகன்யா உற்பத்தி பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளார். பழங்குடி மாணவிகளின் முயற்சியை பாராட்டி அவர்களது ஒட்டுமொத்த கல்வி செலவையும் ஏற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து கல்வி கட்டணங்களையும் ஏற்ற தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கு மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்