இருசக்கர வாகனத்தில் புகுந்த 4,அடி நிளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்...

J.Durai
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:12 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  பகுதியை சேர்ந்தவர் ராஜு, இவர் பெரிய கடைவீதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக தனது டிவிஎஸ் ஸ்கூட்டி பெப், என்ற இருசக்கர வாகனத்தை உணவகத்தின் முன்பு நிறுத்தி வைத்து விட்டு   உள்ளே சென்றார்.  
 
அப்போது பெரிய கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களின் கூட்டத்துக்கு நடுவே கொம்பேறி  மூக்கன் பாம்பு ஒன்று சர சர வென புஸ் புஸ் என சத்தம் போட்டுக் கொண்டு வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் நாலா பக்கம்  அலறி அடித்து ஓடினர். 
 
அதன் பிறகு திடீரென ராஜு நிறுத்தி வைத்திருந்த டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தில் பாம்பு நுழைந்து கொண்டது.
 
ராஜு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து ஸ்கூட்டியை எடுத்த போது ஸ்கூட்டரின் முன் பகுதியில் தலையை எட்டிப் பார்த்தது அதிர்ந்து போன ராஜு ஸ்கூட்டரை அப்படியே விட்டுவிட்டு தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
 
தகவலின் பேரில் நிலைய பொறுப்பு அலுவலர் ராஜா ஜெயசிம்ம ராவ், தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சின்னச்சாமி, 
சிப சக்தி, விக்னேஷ், செல்வகணேஷ், அப்துல் காதர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஸ்கூட்டி பெப் வாகனத்தில் நுழைந்து கொண்ட பாம்பினை வெளியே எடுக்க முயற்சித்தனர்.
 
ஆனால் பாம்பு சாமர்த்தியமாக தன்னை மறைத்துக் கொண்டது இதனால் ஒரு மணி நேரம் போராடியும் பாம்பை இருசக்கர வாகனத்தில் இருந்து பாம்பை பிடிக்க முடியவில்லை  அதற்குள் கடைவீதி முழுவதும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தனர். இதனால் பாம்பு வெளியே வந்தால் கூட்டத்தில் புகுந்து யாரையாவது கடித்து விடும் என்ற நோக்கில் தீயணைப்பு வீரர் ஒருவர் ஸ்கூட்டர் வாகனத்தை இயக்கி  வேகமாக ஆளில்லாத இடத்திற்கு எடுத்துச் சென்றார். 
 
அதன் பிறகு தீயணைப்பு நிலையத்திற்கே பாம்பு நுழைந்த ஸ்கூட்டரை எடுத்துச் சென்றார். அதன் பிறகு இருசக்கர வாகனத்தை தலைகீழாக படுக்க வைத்து தேடிப் பார்த்தனர் ஆனால் பாம்பு வெளியே வரவில்லை அதன் பிறகு போராடி ஸ்கூட்டரின் அடி பாகத்தை கழட்டி அதில் ஒளிந்திருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாபகரமாக பிடித்தனர் பிடித்த பாம்பினை ஒரு சாக்கு பையில் போட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மீண்டும் தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ராஜு தனது வீட்டிற்கு சென்றார்.
 
இதனால் தாராபுரம் கடைவீதி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்