அமலாக்கத்துறை அதிகாரி கைதான வழக்கின் FIR வெளியானது

சனி, 2 டிசம்பர் 2023 (12:54 IST)
திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை.
 
இது சம்பந்தமாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த  நிலையில், இவ்வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
 
அதில், அரசு மருத்துவர், அவரது மனைவி மீத் வழக்குப் பதிவு செய்து அவர்களின் சேவையை களங்கப்படுத்துவதாக ED அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியதாகவும் கேட்கும் லஞ்சப் பணம் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒர லஞ்சப் பணத்தில் உயரதிகாரிகளுக்கும் பங்கு தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
 
மேலும், அமலாக்கத்துறை அதிகாரி அங்கத் திவாரி, காவிரி ஆற்றில் மணல் குவாரி தொடர்பான பணிகளை மேற்கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு, தொடர்பு கொண்டபோது, மணல் குவாரி தொடர்பான சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும், இப்பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்து அனுப்ப முடியுமா? என  அங்கித் திவாரி கேட்டுள்ளார்.
 
இதனால், ஏற்கனவே மணல் குவாரி தொடர்பாக பலரிடம் பணம் கேட்டு மிரட்டினாரா என்ற கோணத்தில் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவெடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்