கைதான அமலாக்கத்துறை அதிகாரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (21:24 IST)
திண்டுக்கல்லில் இன்று காலையில் ரூ.20 லட்சம் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிப்பட்டதை அடுத்து, அவரை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
திண்டுக்கல்லில் இன்று காலையில் ரூ.20 லட்சம் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிப்பட்டார்.
இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவர் ஒருவரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 கோடி கேட்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியானது.
இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய நோட்டுகளை மருத்துவர் அங்கித் திவாரியிடம் கொடுக்க கொடைரோடு டோல்கேட்டில் அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
15 மணி நேர விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள அங்கித் திவாரியை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் எனவும் அவருடன் தொடர்புடையவர்களும் இதன் மூலம் தெரியவரும் என கூறப்படுகிறது.
ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.