ரூ.20 லட்சம் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி! பரபரப்பு தகவல்

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (19:09 IST)
திண்டுக்கல்லில் இன்று காலையில் ரூ.20 லட்சம் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிப்பட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

திண்டுக்கல்லில் இன்று காலையில் ரூ.20 லட்சம் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிப்பட்டதை அடுத்து இதுகுறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவர் ஒருவரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 கோடி கேட்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகிறது.

மேலும், ரூ.3 கோடி தர மருத்துவர் மறுத்ததை அடுத்து இறுதியாக ரூ.51 லட்சம் கண்டிப்பாக தரவேண்டும் எனக் கூறி கடந்த மாதம் நத்தம் சாலையில் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் பெற்றுள்ளார். நேற்றிரவு மீதமுள்ள ரூ.31 லட்சம் கேட்டு மிரட்டிய நிலையில், மருத்துவர்,  அங்கித் மீது  லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய  நோட்டுகளை மருத்துவர் அங்கித் திவாரியிடம் கொடுக்க கொடைரோடு டோல்கேட்டில் அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்