ஐயோ சரக்கா? குடி குடியைக் கெடுக்கும்- வித்தியாசமான திருமண அழைப்பிதல் ! வைரல்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:04 IST)
ஒவ்வொரு திருமணத்திலும் மணமக்கள் வீட்டார் தங்கள் வசதிற்கு ஏற்ப திருமண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம்.

இந்த நிலையில், வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒரு திருமணத்திற்கு அச்சடிக்கபப்ட்ட பத்திரிகையில் வித்தியாசமாக அழைப்பு இருந்ததைப் பார்த்த நெட்டிசன் கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.

அதில், என்னப்பா விசேசம் கல்யாணம்பா….. யாருப்பா மாப்பிள்ளை, யாருப்பா பொண்ணு, என்று அவர்களின் பெயர் குறிப்பிட்டும், அதன் கீழ், எப்போது கல்யானம் என்று தேதியைக் குறிப்பிட்டு, Monday ல வச்சிருக்கீங்க கண்டிப்பா வரனுமா? கண்டிப்பா எப்படியாவது mondayல லீவு போட்டு, துன்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு,  buso- traino- fligt0- பிடிச்சு வரனும்னு சொல்லமாட்டேன்.  நீங்க வரலைன்னா சோறு மிச்சம்- இருந்தாலும் நீங்க கண்டிப்பா வந்து சேருங்க என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும்,  நடக்கிறது,பறக்கிறது, தாவுறது நீந்தது எல்லாம் போடனும்  ஆசை ஆனால் n0n veg போடக் கூடாதுல் அதனால் வெஜ் மட்டும்தான். நீங்க என்ன கொடுத்தாலும் சரி, பாசத்தோடு பணம் கொடுத்தாலும் சரி என்று எதைக் கொடுத்தாலும் சரி என்று மனசு சொல்லுது. ஆனால் நீங்க வந்தா மட்டும் போதும்.

எல்லா சரி சரக்கு இருக்கா ! ஐரோ குடி குடியைக் கெடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்