இத்தனை வசதிகளா? இன்று திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் சிறப்பம்சங்கள்..!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (12:36 IST)
கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்ட நிலையில் இந்த பேருந்தில் இருக்கும் பல்வேறு வசதிகள் குறித்து தற்போது பார்ப்போம்.

கிளாம்பாக்கத்தில்  400 கோடி மதிப்பில் 88.52 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.  

130 அரசு பேருந்துகள் மற்றும் 85 தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதி இந்த பேருந்து நிலையத்தில் உள்ளது. தினசரி 2300-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பயணிகள் பயன்தர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 4 உணவகங்கள், 100 கடைகள், 12 இடங்களில் குடிநீர் வசதி, 540 கழிவறைகள் இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  2560 கார்கள் 568 பைக்குகள்  முதல் தளத்தில் நிறுத்தும் வகையிலும், 84 கார்கள் 2230 பைக்கில் இரண்டாம் தளத்தில் நிறுத்தம் வகையிலும் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்