மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் மற்றும் முடிவடைந்த மேம்பாலம் உள்ளிட்டவை துவக்கி வைக்க உள்ளார் முதலமைச்சர்!

J.Durai

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (14:36 IST)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காலை கோயம்புத்தூர், அரசு கலைக்கல்லூரி-யில்  நடைபெறும் அரசு விழாவில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாநில அளவில் துவக்கி வைக்கிறார்.
 
இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  அரசு பள்ளிகள் ,  அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படவுள்ளது.
 
மேலும், இவ்விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல்  துறை மற்றும்  சமூக அறிவியல் துறை ஆகிய  துறைகளுக்கான புதிய கட்டடங்களை  திறந்து வைக்கவுள்ளார்.
 
தொடர்ந்து உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய  ஊர்களுக்கு  விரைந்து செல்லும் வகையில்  நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 470கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8கி.மீ  நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை  முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 
 
இவ்விழாவில், அமைச்சர்கள்அரசு தலைமைச் செயலாளர்,  மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர், சமூக நலன்  மற்றும்  மகளிர்  உரிமைத் துறை சமூக நல ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 
 
முதலமைச்சர் வருகையை ஒட்டி கோவை அரசு கல்லூரி வளாகத்தில் அமைச்சர் முத்துசாமி ,மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்