தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலியான 39 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், விஜய் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கரூர் நகர காவல் நிலைய போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை விரைவில் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.