பழங்கால பொருட்களின் அருங்காட்சியகம் திறப்பு விழா!

J.Durai

திங்கள், 17 ஜூன் 2024 (13:24 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் வசித்து வருபவர்கள் மகாதேவன் - பிரியதர்ஷினி தம்பதியினர்.
 
தொல்லியல் ஆர்வலரான மகாதேவன்,பணி நிமித்தமாக  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், அபூர்வமாக
கிடைக்கும் பழங்கால பொருட்களை வாங்கி வந்து தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.
 
இதில்,1900 ஆண்டுகள் முதலான, முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய, மற்றும் வெளிநாட்டு கார்கள்,அக்காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய சாரட் வண்டிகள், ரிக்க்ஷா வண்டிகள்,பொம்மைகள், மண் பாண்டங்கள், பியானோ உட்பட பல்வேறு இசைக்கருவிகள் என 2,500க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
 
இப்பொருட்கள் அனைத்தையும் காட்சிபடுத்தி, அக்காலத்தில் நமது மூதாதையர்கள்  வாழ்ந்த வாழ்க்கை முறையை இளைய தலைமுறை,மற்றும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ளும் விதமாக, தனது வீட்டருகே "பொம்மை காதலன் " என்ற தலைப்பில் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளார்.
 
இதன் தொடக்க விழா காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 
தமிழக முதல்வர் , மற்றும் கேரளா,மகாராஷ்டிரா,லடாக் மாநில கவர்னர்கள்
அருங்காட்சியகத்தை அமைத்த மகாதேவனுக்கு  தங்களது வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்