பந்தை எடுக்க ரயில் மீது ஏறிய சிறுவர்கள் ... மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு !

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (19:42 IST)
சென்னை ராயபுரம் செட்டி தோட்டத்தை சேர்ந்த சுனில்குமார். இவர் தனது நண்பன் விஷால் மற்றும் பிற நண்பர்களுடன் சேர்ந்து கிர்க்கெட்  விளையாடிக்கொண்டிருந்தனர்.
அந்த சமயம் அவர்கள் விளையாடி பந்து, ராயபுரம் ரெயில் நிலையத்துக்குள் பந்து விழுந்தததாகத் தெரிகிறது. பின்னர் அந்த பந்தை எடுப்பதற்க்காக சுனில் மற்றும் விஷால் உள்ளே சென்றனர்.  அங்கு நின்றிருந்த சரக்கு ரெயில் மீது மறுபுரத்துக்கு செல்ல முயன்றனர். எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஒரு உயர் மின்னழுத்தக் கம்பியை பிடித்தான் சுனில். அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அவன் கையைப் பிடித்திருந்த விசாலுக்கும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் உடல் கருகி தூக்கிவீசப்பட்டனர். அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது தீவிர சிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்